உயர் பதவியிலுள்ள 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்ற நியமனங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

உயர் பதவியிலுள்ள 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்ற நியமனங்கள்

உயர் பதவியில் உள்ள 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் (12) நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி உயர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு (FCID) ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, மேலும் பல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment