பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க நடவடிக்கை : 24 மணி நேரம் போதாது என நீதிமன்றத்திற்கு அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க நடவடிக்கை : 24 மணி நேரம் போதாது என நீதிமன்றத்திற்கு அறிக்கை

பாதாள குழு கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் சுட்டுக் கொன்ற முன்னாள் கமாண்டோ வீரரான சந்தேகநபரும், அவருக்கு தப்பிச் செல்ல உதவிய சாரதியும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக கொழும்பு குற்றப்பிரிவு (CCD) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் அறிவித்துள்ளது.

துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாரச்சி மற்றும் சாரதி கரஞ்சாரகே மஹேஷ் சம்பத் பியதர்ஷன ஆகியோரை விசாரிக்க 24 மணி நேரம் போதுமானதாக இல்லாததால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7/1 இன் படி கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளரின் உத்தரவுக்கமைய, துறைமுக பொலிஸ் நிலையத்தில் 72 மணி நேர விசாரணைக்காக அவர்களை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கொலை, அதற்கு உதவுதல் மற்றும் உடந்தையாக இருத்தல் ஆகிய பிரிவுகளைக் கொண்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், பிரதான சந்தேகநபரான மஹரகமவைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் 27 வயதானவர் என்றும், அவருக்கு உதவிய சாரதி சம்பத் பியதர்ஷன மில்லவவைச் சேர்ந்த 44 வயதானவர் என்றும் பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment