முதலாவது ஹஜ் குழு மே 13 இல் பயணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

முதலாவது ஹஜ் குழு மே 13 இல் பயணம்

இவ்வருடத்திற்கான புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் முதலாவது குழு எதிர்வரும் மே 13ஆம் திகதி செல்லவுள்ளதாக ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் ஏ.கியூ.பீ.எம். கரீம் தெரிவித்தார்.

இதற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அரச ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்ள சவூதி அரேபியாவினால் இலங்­கைக்கு 3,500 ஹஜ் கோட்­டாக்கள் வழங்கப்பட்டுள்­ளன. இதில் 90 சத­வீ­த­மான யாத்­தி­ரி­கர்கள் தமது பெயர்களை பதிவு செய­துள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கைக்கு இந்த வருடம் கிடைக்கப் பெற்ற ஹஜ் கோட்­டாக்கள் 92 ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அதேவேளை, 30 நாட்­களுக் கான ஹஜ் பொதிக்கு 21 இலட்சம் ரூபாவினை அறி­வி­டு­மாறு ஹஜ் குழு சிபா­ரிசு செய்­துள்­ளமை குறிப்பிடத்­தக்­கது.

இலங்கை யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இந்த வருடம் மினாவில் 2ஆவது வலயத்தின் பீ பிரி­வி­லேயே வி­லேயே கூடாரம் வழங்­கப்­பட வேண்டும் எனவும் ஹஜ் குழு தீர்­மா­னித்­துள்­ளது. 

Vidivelli

No comments:

Post a Comment