தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு? பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ள TRC - News View

About Us

About Us

Breaking

Monday, January 13, 2025

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு? பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ள TRC

கையடக்கத் தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் (Package) அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட இது தொடர்பில் இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

“இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்ற வகையில், தொலைத் தொடர்பு சேவைகள் தொடர்பான கட்டணங்களை அங்கீகரிக்கும் செயற்பாட்டில், 1991ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரங்களின்படி, எந்தவொரு தொலைபேசி கட்டண பொதியின் (Package) கட்டணங்களும் அதிகரிக்கப்படவில்லை என்பதனை தாம் தெளிவாக அறிவிப்பதாக அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.

அஸீம் கிலாப்தீன்

No comments:

Post a Comment