நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை விண்ணப்பம் குறித்த உத்தரவை காலவரையின்றி ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதங்களை பரிசீலித்த, பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற குழு இன்றையதினம் (29) இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை மே 08 ஆம் திகதி முன்னெடுக்க நீதிபதிகள் குழாம் இன்று அறிவித்திருந்தது.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் இலத்திரனியல் வீசா (e-Visa) வழங்கும் செயன்முறையை 2 தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம்சாட்டிய உயர் நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
No comments:
Post a Comment