ஹபரணை - மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவர்களில் 2 பஸ்களின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (29) காலை 11:00 மணியளவில் தனியார் பஸ்ஸொன்னும் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.
கட்டுநாயக்கவிலிருந்து சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment