நீதிமன்றில் ஆஜரான சிவனேசதுரை சந்திரகாந்தன் - News View

About Us

About Us

Breaking

Friday, January 10, 2025

நீதிமன்றில் ஆஜரான சிவனேசதுரை சந்திரகாந்தன்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று (10) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் 
நேசகுமார் விமல்ராஜிடம் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின்போது குறித்த காணி ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து காணி  ஆணையாளர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றில் ஆஜராகி இருந்தார்.

No comments:

Post a Comment