பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைத் தண்டனையுடன் 1,500 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனையை விதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஞானசார தேரர் கடந்த மாதம் 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றில் முன்னிலையாகாததால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்றைய தினமான ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்” என்ற கருத்தினூடாக இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி தண்டனைக் கோவை சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment