தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என நம்புகின்றோம் : லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தினர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 8, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என நம்புகின்றோம் : லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தினர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான உண்மையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்னர் நான்கு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனினும் எந்த அரசாங்கத்திற்கும் இந்த கொலைகள் குறித்து விசாரணை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை என லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணை செய்வதாக உறுதியளிக்கவில்லை. வேறு பல முக்கியமான சம்பவங்கள் குறித்தும் விசாரணை செய்வதாக உறுதியளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர், விடுதலைப் புலிகளே இதனை செய்தனர் என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்தனர்.

எனினும் 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் எங்கள் சட்டத்தரணி சிஐடிக்கு இந்த விசாரணையை மாற்றுமாறு கோரினார், அதனை தொடர்ந்து அதனை சிஐடிக்கு மாற்றினார்கள் அவ்வேளை ஷானி அபயசேகரவும் இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக காணப்பட்டார் என லசந்தவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

சிஐடியினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது லசந்தவின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தன, இந்த கொலைகளில் ஈடுபட்டவர்களின் பெயர் முகவரிகள் கூட தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் ஷானி அபயசேகர மீண்டும் விசாரணைகளிற்கு திரும்பியுள்ள நிலையில் புதிய விசாரணைகள் அவசியமில்லை, விசாரணைகளை பூர்த்தி செய்தாலே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment