வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரி மாணவன் அல்ஹாபிழ் எம்.ஐ.எம். இல்ஹாம் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக வாழைச்சேனை ஹைஅதுந் நஹ்ஜிய்யீன் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
சவூதி அரேபிய அனுசரணையுடன் இலங்கை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2025.01.18 ஆம் திகதி தேசிய ரீதியில் நடாத்திய அல்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொண்டு (3ஆம் பிரிவு 05 ஜுஸ்உவில்) முதலிடம் பெற்றமைக்காக அல்ஹாபிழ் எம்.ஐ.எம். இல்ஹாம் இவ்வாறு கெளரவிக்கப்பட்டார்.
இப்பாராட்டு நிகழ்வானது அந் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். றஹ்மதுல்லாஹ் (பாலாஹி) முன்னிலையில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். அஷ்ரப் (நஹ்ஜி) தலைமையில் ஏனைய உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் 2025.01.31ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.
மேலும் அப்போட்டியில் கலந்துகொண்ட அதே மஹல்லாவைச் சேர்ந்த கே.எம். ஆஹில் என்ற மாணவனும் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
அத்தோடு அல் ஹக் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் தங்களுடைய பாராட்டினை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
காலஞ்சென்ற மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் தற்போதைய மன்னரும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோர்களின் பெயரில் பெருந்தொகைப் பணப் பரிசில்களுடன் பல தேசிய, சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிகளை சவூதி அரேபியா தொடர்ந்து நடத்தி வருகின்றது.
இலங்கை வரலாற்றில் சவூதி அரேபியாவின் ஏற்பாட்டில் அந்நாட்டின் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் ஊடாக தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் 2023 இல் முதன் முறையாக அல்குர்ஆன் மனனப்போட்டி நடத்தப்பட்டது.
அத்தொடரில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் ஏற்பட்டில் இலங்கையில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
சவூதி அரேபியா அன்று தொட்டு இன்று வரை அல்குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் மிக முக்கியத்துவம் அளித்துவரும் நாடாகும். இதனை அனைவரும் அறிவர்.
அந்த வகையில் சவூதி அரேபியாவுக்குள்ளேயும் உலக நாடுகளிலும் அல்குர்ஆன் மனனப் போட்டிகளை தொடர்ந்தும் நடாத்தி பல மில்லியன் ரியால்களை அதற்கான பரிசில்களாக சவூதி வழங்கி வருகிறது.
No comments:
Post a Comment