முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மூன்று வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க
சிவில் விமான சேவை அதிகார சபையின் மூலம் வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிடுவதற்காக ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 520 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை.
சிவில் விமான சேவை அதிகார சபையின் 3,60,000 ரூபாவை தனியார் நிறுவனத்திற்கு வழங்க அந்த அதிகார சபையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை.
சிவில் விமான சேவை அதிகார சபையின் 4,94,000 ரூபா நிதியை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை.
உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே, மேற்படி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment