பிரபல ஹோட்டலொன்றில் வாங்கிய மாலு பாணில் லைட்டர் பாகங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 8, 2025

பிரபல ஹோட்டலொன்றில் வாங்கிய மாலு பாணில் லைட்டர் பாகங்கள்

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிலிருந்து வாங்கிய மாலுபாணில் லைட்டர் பாகங்கள் காணப்பட்டதாக பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் இன்று (08) காலை தனது இரண்டு மகன்களுக்காக இரண்டு மாலு பாண்களை கொள்வனவு செய்துள்ளார். 

இளைய மகன் மாலு பாணின் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதில் லைட்டரின் உலோக பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக, மஞ்சுள பெரேரா பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவித்ததையடுத்து, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிறுமியின் தந்தை பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றதாகவும், முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படாமல் தான் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ஈஷா மஹிந்ததாச தெரிவித்ததாவது, “சம்பவம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், ஆனால் ஒரு நபர் மாலு பாணுடன் வந்து விட்டுச் சென்றதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்” குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment