கட்டார் நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ரோஷன் சிதாரா கான் அசாத் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கட்டார் நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ரோஷன் சிதாரா கான் அசாத் 23 ஆம் திகதி டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கட்டார் நாட்டிற்கான இலங்கையின் முதல் பெண் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ரோஷன் சிதாரா கான் அசாத் 26 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள இலங்கையின் வெளிநாட்டு சேவை அதிகாரியாவார்.
அவர், சார்க் மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான கூடுதல் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களிலும் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து உரையாற்றிய தூதுவர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளளார்.
No comments:
Post a Comment