ஓமானில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் அரச உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் மரணம் கொலையா? தற்கொலையா? என ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில், ஓமான் நாட்டுக்கு வீட்டுப் பணிப் பெண் தொழிலுக்கு அழைத்துச் சென்று, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி உயிரிழந்த ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி மற்றும் அவரது மூத்த சகோதரியை ஏமாற்றி ஆட் கடத்தலில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படும் ஹம்பாந்தோட்டை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளின் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியும் மற்றுமொரு சந்தேகநபரும் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றைய சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகயின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதிகள் இருவரையும் டுபாயில் பராமரிப்பு சேவை தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து, ஓமானில் வீட்டுப் பணிப் பெண் தொழிலுக்காக அனுப்புவதற்கு இந்த சந்தேகநபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment