பாராளுமன்ற உறுப்பினர்களின் நாளாந்த உணவுக்கான தொகை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2025

பாராளுமன்ற உறுப்பினர்களின் நாளாந்த உணவுக்கான தொகை அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளாந்தம் வசூலிக்கப்படும் தொகையை ரூ. 2,000 ஆக அதிகரிக்க பாராளுமன்ற சபைக் குழு இன்று (23) முடிவு செய்துள்ளது.

புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, இதற்கு முன்னர் ரூ. 100 ஆக இருந்த காலை உணவு தற்போது ரூ. 600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.300 ஆக இருந்த மதிய உணவு கட்டணத்தை ரூ. 1200 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேநீருக்கான விலை ரூ. 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என்று குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment