11 கிலோ தங்கத்துடன் மூவர் கைது : பெறுமதி 28 கோடி - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

11 கிலோ தங்கத்துடன் மூவர் கைது : பெறுமதி 28 கோடி

கற்பிட்டி - பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் 11 கிலோ 300 கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேகநபர்கள் மூவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் ரூபா 28 கோடிக்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 இற்கும் 45 இற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கற்பிட்டி - பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான டிங்கி இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன்போதே, குறித்த இயந்திர படகில் தங்கம் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதன்போது குறித்த தங்கத்தை பறிமுதல் செய்த கடற்படையினர், அந்த இயந்திர படகில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், குறித்த தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி விஷேட நிருபர்

No comments:

Post a Comment