W.M. மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

W.M. மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை வரித் தொகையை செலுத்தாமையால் W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 10 மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரங்களில் 8 பத்திரங்களை இன்று (05) முதல் தற்காலிகமாக இரத்து செய்யப்படுகிறது

குறித்த நிறுவனம் கலால் வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும், அது தொடர்பான ரூ. 5.7 பில்லியன் கலால் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வரி மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து கலால் மதுபான உரிமங்களும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்கப்படாது என்றும் கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கலால் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment