ஓய்வூதிய வயதை தீர்மானிக்காவிடின் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குவதை தவிர்க்க முடியாது : எச்சரிக்கும் GMOA - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

ஓய்வூதிய வயதை தீர்மானிக்காவிடின் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குவதை தவிர்க்க முடியாது : எச்சரிக்கும் GMOA

நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால், சுகாதாரத் துறை நெருக்கடிகளை எதிர்நோக்குவதை தவிர்க்க முடியாதெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இம்மாத இறுதிக்குள் ஓய்வு பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டுமென, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 லிருந்து 60 ஆக குறைப்பதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது.

இந்த தீர்மானத்துக்கு எதிராக 176 மருத்துவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக பேணுமாறு உத்தரவிட்டிருந்தது. அமைச்சரவையும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஓய்வு பெற வேண்டியுள்ளதாகவும், இவ்வாறு நிகழின் சுகாதாரத்துறை நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment