சபாநாயகர் அசோக ரன்வெல்லவின் கல்வி தகைமைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், எதிர்வரும் சில தினங்களில் அவரே தெளிவான விளக்கமொன்றை முன்வைக்கவுள்ளார். அவரின் கல்வி தகைமை தொடர்பிலான உறுதிப்படுத்தல்களை வெளியிட்டதன் பின்னர், அவர் தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவிக்குமென்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் விளக்கமளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும், “சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, எதிர்வரும் சில நாட்களில் இது தொடர்பில் சபாநாயகரே விளக்கமளிப்பார். அவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். எனவே இது தொடர்பில் சபாநாயகர் தெளிவுப்படுத்துவார்.
சபாநாயகர் அவரின் தகுதி தொடர்பில் அறிவித்ததன் பின்னர், அவரின் தகைமை தொடர்பில் வெளியிடப்படும் தகவல் உண்மை எனில் அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்பது தொடர்பிலும் அந்த தகவல்கள் போலியெனில் அது தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கை தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும்” என்று விளக்கமளித்தார்.
No comments:
Post a Comment