வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று (05) வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர்.

தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதால் விரக்தியடைந்த விவசாயிகள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment