வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலை வாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment