போலி பிரசாரங்கள் முன்னெடுப்பு, நிதி அமைச்சு விரைவில் அறிவிக்கும் - அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

போலி பிரசாரங்கள் முன்னெடுப்பு, நிதி அமைச்சு விரைவில் அறிவிக்கும் - அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

(எம்.மனோசித்ரா)

வாகன இறக்குமதி தொடர்பில் மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எந்த வகைக்குட்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்பதை நிதி அமைச்சு விரைவில் அறிவிக்கும். வரையறைகளுடனேயே அவற்றுக்கான அனுமதியும் வழங்கப்படும் என அமைச்சர் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள பொருளாதார நிலைமை, எமது பொருளாதார இலக்கு மற்றும் கையிருப்பு குறித்த ஆழமான மதிப்பாய்வின் பின்னரே வாகன இறக்குமதி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தீர்மானம் இதனை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டது.

எனவே இது தொடர்பில் போலியான தகவல்களை பகிர்ந்து மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் வரையறைகளுக்கு உட்பட்டே வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்த வகைக்குட்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்பதை நிதி அமைச்சு விரைவில் அறிவிக்கும் என்றார்

No comments:

Post a Comment