மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்கள் தாம் பாடசாலைகளில் கற்பிற்கும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடாத்துவதை தடை செய்து, மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு கட்டண அறவீட்டுடன் கூடிய பிரத்தியேக கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த சுற்றறிக்கைக்கு ஆட்சேபனைகள் எழுந்ததையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தமக்கு அறியக் கிடைத்ததைத் தொடர்ந்து, தாம் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபுடன் கலந்துரையாடி இதன் பின்னணியல் காணப்படும் பிரச்சினைகளை தொடர்பில் எடுத்துரைத்ததாகவும். அதன் பின்னர் இது தொடர்பில் கொள்கை ரீதியிலான இணக்கம் காணப்படும்வரை குறித்த சுற்றறிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலுள்ள 11 வலயங்களில் நிர்வாக பிரச்சினைகள், அதிபர் - ஆசிரியர் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், மிக அவசரமாக இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலையில், ஆசிரியர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை நியாயமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தும் வகையில், ஆளுநரின் செயலாளரினால் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment