மின்சாரம் தாக்கி 50 யானைகள் மரணம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 23, 2024

மின்சாரம் தாக்கி 50 யானைகள் மரணம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்குண்டு சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் உள்ள காட்டு யானைகளை பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஆதரவு  அவசியமாகும்.

எனவே, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார வேலிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் இலங்கை மின்சார சபையின் 0112 118 767 அல்லது 1987 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள காட்டு யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கின்றன. 

எனவே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு உதவுகின்ற காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment