310 பேருடன் கொழும்பு துறைமுகம் வந்த சீன கடற்படை மருத்துவமனை கப்பல் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 22, 2024

310 பேருடன் கொழும்பு துறைமுகம் வந்த சீன கடற்படை மருத்துவமனை கப்பல்

சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ‘Peace Ark’ நேற்று (21) சம்பிரதாய பயணமாக கொழும்பை வந்தடைந்தது. 

இவ்வாறு வருகை தந்திருந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

‘பீஸ் ஆர்க்’ என்பது 178 மீட்டர் நீளமுள்ள மருத்துவமனைக் கப்பல் ஆகும். இது கேப்டன் Deng Qiang தலைமையில் 310 பணியாளர்களைக் கொண்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனை கப்பல், கொழும்பில் உள்ள சீன தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் ஏற்பாடு செய்யவுள்ளது. 

‘பீஸ் ஆர்க்’ மற்றும் இலங்கை கடற்படை மருத்துவ திணைக்களத்தின் மருத்துவ ஊழியர்களால் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், கொழும்பில் தங்கியிருக்கும் காலப் பகுதிகயில் குறித்த கப்பலின் பணியாளர்கள் ​​நாட்டின் சில சுற்றுலாத் தலங்களை பார்வையிடவுள்ளார்கள். 

இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் சில நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்பார்கள்.

இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கடற்படை மற்றும் கடல்சார் அகடமி மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பயிற்சி அதிகாரிகளும் கப்பலின் செயல்பாடுகள் பற்றிய விளக்கக்காட்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பல் ‘பீஸ் ஆர்க்’ எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.

No comments:

Post a Comment