இன்று (21) அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலஸ்கல தொரமுரே வீதியில் உள்ள கால்நடை அலுவலகத்திற்கு அருகில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சாரதியாக பணிபுரிந்து வந்த, வலஸ்கல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் எவ்வாறு வந்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மறைந்து வாழும் திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் பெயரில் குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவரிடம் மிரட்டி பணம் பறித்த கோரிய சம்பவம் தொடர்பாக மரணித்தவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கும், இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 வகைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment