பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 16, 2024

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு

பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வு இம்மாதம் 25, 26, 27 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று சனிக்கிழமை (16) வெளியிடப்படவுள்ளது.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறையும் 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment