நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்ட வாக்குப் பெட்டிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 14, 2024

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்ட வாக்குப் பெட்டிகள்

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டது.

நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப் பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப. 5.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் வருகை தந்த சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன், உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ் மற்றும் வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்க ஆகியோா் வரவேற்றார்கள்.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment