21 நாட்களுக்குள் அனைத்து தேர்தல் செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, November 18, 2024

21 நாட்களுக்குள் அனைத்து தேர்தல் செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, 2024 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து தேர்தல் பிரசார செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டுமென்று தேர்தல்‌ ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 2024.12.06 ஆம்‌ திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்‌ போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்‌ மாவட்டத்தின்‌ தெரிவத்தாட்சி அலுவலருக்கும்‌, அரசியலமைப்பின்‌ 99௮ உறுப்புரைக்கமைய (தேசியப்‌ பட்டியல்‌) பெயர்‌ குறிக்கப்பட்ட வேட்பாளர்கள்‌ தமது வருமான, செலவின விபரத்திரட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கும் ஒப்படைக்க வேண்டுமென்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment