எரிபொருட்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2024

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

மாதாந்த விலைத் திருத்தத்தின் பிரகாரம் வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் விலை 6 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 371 ரூபாவாகும்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை மாற்றமின்றி 311 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை மாற்றமின்றி 283 ரூபாவாகும்.

மேலும், ரூ.183 ஆக இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை அப்படியே உள்ளது.

இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

No comments:

Post a Comment