முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) கண்டி கட்டுகஸ்தோட்டையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத, பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை கட்டுகஸ்தோட்டைக்கு விஜயம் செய்து லொஹான் ரத்வத்தவை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment