நாட்டில், இந்நாட்களில் இன்ஃப்ளூவன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் அதிகம் பதிவாகி வருவதனால், குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு, சுகாதாரப் பிரிவின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கை, கால் மற்றும் வாய் நோய் போன்ற நோய்களும் குழந்தைகளுக்கிடையே பரவி வருவதாக டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
எனவே, சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சலை அவதானிக்க முடியும் எனவும், எனவே எப்போதும் முகக்கவசங்களை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் எனவும் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment