ஊடக நிறுவனங்களுக்கு முடிவுகளை வழங்க மாட்டோம் - தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 17, 2024

ஊடக நிறுவனங்களுக்கு முடிவுகளை வழங்க மாட்டோம் - தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் அல்லது கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தாலும் அத்தகைய ஊடகங்களிடமிருந்து விலகி இருக்க முடியும்.

மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் ஊடாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவுகள் பகிரப்பட்டு வருகின்றது.

ஊடக நிறுவனங்களுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment