எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மொத்தமாக 10 இலட்சம் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.
அச்சிடப்பட்ட விண்ணப்பங்களில் ஒரு தொகுதி நேற்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கைளிக்கப்பட்டுள்ளதோடு, மீகுதி இன்று வழங்கப்பட உள்ளன.
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வாக்குச் சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உட்பட பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளும் நிறைவடையும் என்று கங்கா கல்பானி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
விசேட வர்தமானி அறிவித்தலின்படி, ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி நண்பகல் வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த பின்னர் மீதமுள்ள அச்சிடும் பணிகள் ஆரம்பமாகும்.
2024ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment