வாகனங்களில் அரச இலச்சினை மற்றுமொரு விசேட சுற்றறிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2024

வாகனங்களில் அரச இலச்சினை மற்றுமொரு விசேட சுற்றறிக்கை

அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில், அரச இலச்சினை, திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில், இவ்வாறு செயற்படுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வாகனங்களுக்கு அரசாங்க இலச்சினை மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கான சுற்றறிக்கையை 2002 இல், பொது நிர்வாக, முகாமைத்துவ மற்றும் சீர்திருத்தங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரச சின்னங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக 1992 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மீளாய்வு செய்து சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

1992 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வாகனங்களில் அரச இலச்சினையைப் பயன்படுத்துவது தொடர்பாக மட்டுமே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அந்த அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச இலச்சினையுடன் அமைச்சு, திணைக்களம் அல்லது நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும் என திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment