இலத்திரனியல் புகையிரத பயணச்சீட்டுகளை (e-ticket) கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (23) முதல் செயற்படுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை இந்த முறையின் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.
இணைய வழி ஊடாக புகையிரத பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை நேற்று (22) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்தார்.
இன்று (23) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, www.pravesha.lk இணையத்தளம் மூலம் டிஜிட்டல் வழியில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் டிஜிட்டல் புகையிரத பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
தேவையானவர்கள் முன்னர் போன்றே கவுன்டர்கள் மூலமாகவும் பயணச்சீட்டுகளைப் பெறலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் சீசன் டிக்கெட்டுகளுக்கும் இந்த முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
மேலும், புகையிரத இருக்கை முன்பதிவு, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கும் அடுத்த 03 மாதங்களில் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.’’ என்று தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்கவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment