ஐந்தில் இரண்டு பெண்கள் நெருங்கிய துணையினால் உடல், பாலியல் மற்றும் உள ரீதியான வன்முறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியம் மற்றும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான இலங்கை தேசிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு நாட்டில் 25 மாவட்டங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் நெருங்கிய துணையினால் வன்முறைக்குள்ளாவதை மையமாகக்கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 39.8 சதவீதமான பெண்கள் நெருங்கிய துணையினால் உடல், பாலியல் மற்றும் உள ரீதியான வன்முறைக்கு எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறு தங்கள் நெருங்கிய துணையினால் வன்முறைக்குள்ளான பெண்களில் அரைவாசி பேர் (49.3%) இது தொடர்பில் எந்தவொரு முறைப்பாடுகளையும் பதிவு செய்யவில்லை உதவிகளையும் பெறவில்லை.
அதேவேளை, 52.3 சதவீதமான பெண்கள் தங்களுக்கு குழந்தைகள் இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியத்தினால் பல பெண்களிடம் முன்னெடுக்கப்பட்ட நேர்காணலில், ஐந்தில் ஒரு பெண் தங்கள் நடக்கும் பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவது அவமானம் என கருதி வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் தலைவனாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதில், 46.5 சதவீதமானவர்கள் ஒரு நல்ல மனைவி தனக்கு உடன்பாடு இல்லை உடன்படவில்லை தனது கணவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மூன்றில் ஒரு பகுதி பெண்கள் மனைவியை கணவர் அடிப்பது சரி என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நான்கில் ஒரு பங்கு பெண்கள் வன்முறையின் காரணமாக கடுமையான உளவியல் தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளதோடு, மனச்சோர்வின் அறிகுறிகள் குறித்து தெரிவித்துள்ளனர்.
அவர்களில், 35.7 சதவீதமான பெண்களுக்கு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் இருந்ததாக அறிக்கையின் புள்ளிவிவரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
60 சதவீதமான பெண்கள் நெருங்கிய துணையினால் உடல் ரீதியான வன்முறையை அனுபவிப்பதை அவர்களின் பிள்ளைகள் அறிந்துள்ளார்கள்.
"நான் உயிர் பிழைப்பேன் என்று நான் நினைக்கவில்லை. நான் அனுபவித்த எல்லாவற்றுக்கும் பிறகு, அவர் எனக்கு என்ன செய்தார், சுரங்கப்பாதையின் முடிவில் நான் வெளிச்சத்தைப் பார்க்கவில்லை. வெளிச்சம் எதுவும் மிச்சமிருப்பதாக நான் நினைக்கவில்லை” மற்றும் “நாங்கள் வாழும் இந்த நரகத்திலிருந்து எங்களை விடுவிக்கவும்” என பெண்கள் கோருவதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment