உலகின் மிக வயதான பெண் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2024

உலகின் மிக வயதான பெண் காலமானார்

அமெரிக்காவில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் அதிக வயது கொண்ட உயிர் வாழும் பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் Maria Branyas தனது 117 வயதில் காலமாகியிருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தவர்.

வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன்தினம் (20) காலமானார்.

அமெரிக்காவில் பிறந்த மரியா, கொரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்தவர். மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ப்ளூ உள்ளிட்டவற்றையும் தனது காலத்தில் பார்த்தவர் ஆவார்.

கடந்த 2 தசாப்தங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்த இவர், 2023 இல் கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.

மரியா பிரான்யாசின் மறைவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், “மரியா பிரான்யாஸ் மோரேரோ வயது 117. எங்களை விட்டு பிரிந்துவிட்டார்.

அவர் விரும்பியபடியே தூக்கத்தில், அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியின்றி இறந்தாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்ணாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.

No comments:

Post a Comment