தனது ஆவணங்கள், பொருட்களுடன் அமைச்சிலிருந்து விடைபெற்றார் ஹரின் : சவால்களை ஏற்றுக் கொள்வது புதிய விடயம் அல்ல என தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 9, 2024

தனது ஆவணங்கள், பொருட்களுடன் அமைச்சிலிருந்து விடைபெற்றார் ஹரின் : சவால்களை ஏற்றுக் கொள்வது புதிய விடயம் அல்ல என தெரிவிப்பு

சுற்றுலா அமைச்சில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுகளின் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், அவர்கள் முன்னிலையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சவால்களை ஏற்றுக் கொள்வது தனது வாழ்வில் புதிய விடயம் அல்ல எனவும் நாட்டுக்கு தேவையானபோது அதனை தாம் செய்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டிற்காக சிறப்பாக சேவையாற்றி நாட்டுக்கு உதவிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையிலான அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானத்தை இன்று (09) உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

ஹரின் பெனாண்டோ ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. என்பதோடு அவர் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவி வகிப்பதோடு, மனுஷ நாணயக்கார காலி மாவட்டத்திலிருந்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார் என்பதோடு, அவர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பதவியை வகிக்கின்றார்.

No comments:

Post a Comment