அங்கஜன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுந்திர கட்சி எம்.பிக்கள் இருவர் ரணிலுக்கு ஆதரவு - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2024

அங்கஜன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுந்திர கட்சி எம்.பிக்கள் இருவர் ரணிலுக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரண்டு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர், யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (23) காலை ஜனாதிபதியை சந்தித்த அவர்கள் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரு தலைவரே நாட்டுக்கு தேவை என சுட்டிக்காட்டினர். தற்போதைய நிலையில் பரீட்சார்த்தம் செய்து பார்ப்பது எந்த வகையிலும் சாத்தியமில்லை எனவும், நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தூய்மையான அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், 2013 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, 2015 இல் தேசியப்பட்டியல் உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராகவும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராகவும் செயற்படுகிறார்.

சாரதி துஷ்மந்த மித்ரபால, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கேகாலை மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளதோடு தற்போது கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.

No comments:

Post a Comment