மாதாந்த விலை சூத்திரத்தின்படி, இன்று நள்ளிரவு (31) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 92, பெற்றோல் 95, சுப்பர் டீசல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.
இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.
லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 307 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment