மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பேன் அதற்கான ஆணையை பெற்று தாருங்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, August 16, 2024

மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பேன் அதற்கான ஆணையை பெற்று தாருங்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம், ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (15) தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தை கூட கொண்டுசெல்ல முடியாதென சிலர் கூறியபோது, இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நிலைக்கு கொண்டு வந்த தன்னிடம், இனிவரும் காலங்களிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான வலு இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்திக்க முன்வராத தலைவர்களிடம் நாட்டை ஒப்படைப்பது பொருத்தமானதாக அமையுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, அன்று பற்றி எரிந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தாம், முன்வந்திருக்காவிட்டால் இன்றைய பங்களாதேஷின் நிலைமையை அன்றே இலங்கை சந்தித்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து பொருளாதாரத்தையும் பலப்படுத்தி ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்தும் நிலைக்கு நாட்டை கொண்டு வந்த தனக்கு, ஆதரவளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ”பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கும், எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

நான், நாட்டை பொறுப்பேற்ற 2022 ஜூலை மாதத்தில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம் அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதுடன் எனது வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.

அப்போது, ​​தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, ஆட்சி கொண்டு நடத்துவதும் சாத்தியமற்றதென பலர் நினைத்தனர். ஆனால் சபாநாயகர் உட்பட நான் பாராளுமன்றத்தை முற்றுகையிட அனுமதிக்கவில்லை. பின்னர் அந்த பாராளுமன்றம் என்னை ஜனாதிபதியாக நியமித்தது.

இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அன்றைய தினம் பாராளுமன்றத்தை பாதுகாத்தனர். இல்லையேல் இன்றைய பங்களாதேஷைப் போன்ற நிலைமையை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

எரிந்து கொண்டிருந்த நாட்டில் அந்த நிலைமையை தடுத்து இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். அழிவைத் தடுக்க எதிர்க்கட்சிகள் எவரும் ஆதரவு வழங்கவில்லை. அரசாங்கத்தை பதவி விலக சொல்லிவிட்டு அவர்களும் ஓடிவிட்டனர்.

அன்று எரிபொருள் வரிசைகள் இருந்த நாட்டில் இன்று எரிபொருள் வரிசைகள் இல்லை. உணவுக்கும் மருந்துக்கும் வரிசைகள் இருந்த நாட்டில் இன்று அந்த வரிசைகள் இல்லை. இப்போது மக்கள் கையில் பணம் இருக்கிறது. இப்போது மக்கள் வாழக்கூடிய நாடு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன்.

இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் ஓடிவிட்டனர். பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை. ஆனால் இன்று இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை முன்னேற்றியுள்ளோம்.

No comments:

Post a Comment