எம்.பி. பதவி நீக்கப்பட்ட டயனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2024

எம்.பி. பதவி நீக்கப்பட்ட டயனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கை குடியுரிமையின்றி போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள டயனா கமகேவிற்கு எதிராக இன்றையதினம் (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் குற்றப்பத்திரிகையை வாசிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் வாசிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment