தலைமைப் பதவியிலிருந்து விலகினார் வணிந்து ஹசரங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, July 11, 2024

தலைமைப் பதவியிலிருந்து விலகினார் வணிந்து ஹசரங்க

இலங்கையின் தேசிய ஆடவர் T20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க, தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் நலன்கருதி, தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்துள்ளதாக ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு ஒரு வீரராக எனது சிறந்த முயற்சிகளை எப்பொழுதும் வழங்குவேன் எனத் தெரிவித்துள்ள வணிந்து, நான் எப்போதும் போல் எனது அணிக்கும், தலைமைமைத்துவத்திற்கும் ஆதரவாக உடனிருப்பேன் என வணிந்து ஹசரங்க தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் வணிந்து ஹசரங்க எமக்கு ஒரு முக்கிய தொடர்ந்தும் இருப்பார் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment