மனுவை வாபஸ் பெற்ற டயானா கமகே : தொடர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2024

மனுவை வாபஸ் பெற்ற டயானா கமகே : தொடர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று (17) வாபஸ் பெற்றது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த மனுவை தொடர வேண்டிய அவசியம் இல்லை என டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அதனை வாபஸ் பெற அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மனுவை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

No comments:

Post a Comment