பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பாரிந்த ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2024

பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பாரிந்த ரணசிங்க

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க முன்னாள் பிரதம நீதியரசரான கே.ஏ.பாரிந்த ரணசிங்கவின் புதல்வராவார்.

சட்டமா அதிபராக செயற்பட்ட சஞ்ஜய் ராஜரத்தினத்தின் சேவைக்காலம் கடந்த 26ஆம் திகதியுடன் நிறைவடைந்தமையினால் கடந்த சில நாட்களாக சட்டமா அதிபர் பதவியில் வெற்றிடம் நிலவியது.

சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு அரசியலமைப்பு பேரவையிடம் ஜனாதிபதி யோசனை முன்வைத்ததுடன் 2 சந்தர்ப்பங்களிலும் அந்த யோசனை பெரும்பான்மையினால் நிராகரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment