மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் மெல்சிறிபுர பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி நிருபர்
No comments:
Post a Comment