அழுத்தங்களுக்கு மத்தியில் பதவி துறந்தார் அமெரிக்க இரகசிய சேவை பிரதானி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 24, 2024

அழுத்தங்களுக்கு மத்தியில் பதவி துறந்தார் அமெரிக்க இரகசிய சேவை பிரதானி

அமெரிக்க இரகசிய சேவையின் பிரதானி கிம்பர்லி சீட்டில் இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பிரதான கட்சிகாளன ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் அவரை பதவி விலகுமாறு தெரிவித்திருந்த நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக பென்சில்வேனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதில் ட்ரம்ப் தெய்வாதீனமாக தப்பியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளின்போது, அமெரிக்க இரகசிய சேவை பிரதானியான கிம்பர்லி சீட்டில் உரிய பதில்களை வழங்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் என்ற அடிப்படையில், இந்த படுகொலை முயற்சியின் போதான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கிம்பர்லி சீட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல தசாப்தங்களாக கிம்பர்லி சீட்டில், அரச சேவையில் வழங்கிய பங்களிப்பிற்காக நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புதிய பணிப்பாளர் ஒருவரை விரைவில் நியமிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment