அம்பலாங்கொடை, கந்த மாவத்தை பகுதியில் பிரபல முன்னாள் கிரிக்கட் வீரரான தம்மிக்க நிரோஷன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரபல கிரிக்கட் வீரரான 41 வயதான தம்மிக்க நிரோஷன் வீடொன்றின் முன்னால் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுடப்பட்ட தம்மிக்க நிரோஷன், இலங்கையில் முதல்தர கிரிக்கெட் அணியான சிலாவ் மேரியன்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் கேப்டனாகவும் இவர் இருந்துள்ளார்.
அம்பலங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பாடசாலை கிரிக்கெட் கேப்டனாகவும் இவர் பணி புரிந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி வந்தார் என்பது இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment