சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்போது உள்ளவரே வைத்திய அத்தியட்சகர் : சுகாதார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2024

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்போது உள்ளவரே வைத்திய அத்தியட்சகர் : சுகாதார அமைச்சர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று (17) விஐயம் செய்தனர்.

குறித்த விஜயத்தின்போது, அமைச்சர் வைத்தியசாலை வளாகத்தில் மரக் கன்றையும் நாட்டி வைத்தார். 

அத்தோடு, விடுதிகள் சத்திர சிகிச்சை பிரிவுகளையும், வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டதுடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த விஐயத்தின்போது சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment